இனிமை 112

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.

அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும் நினைவுகளை
இனிமை தரும் கவிதைகளாய்

வரைய வார்த்தை கோர்த்து
வடுக்கள் வலிகளை விலக்கி
வம்பு வீம்பு நீக்கி
வாழ்வில் சிறுமை போக்கி

இயற்கை தந்த இனிமை
இவ்வுலகின் பசுமை நோக்கி
கசப்பான தருணங்கள் அகன்றே
கடந்துபோகும் வாழ்வே இனிமை!

Jeba Sri
Author: Jeba Sri

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading