நேவிஸ் பிலிப்

04/01/24 கவி இல (116)
உலகின் நிலை மாற என்ன கொண்டு வருகிறாய்,?

வருடம் தோறும்
வந்து போகும் புத்தாண்டே வருக
முன்னாண்டு போலன்றி இவ்வாண்டை
வளமான ஆண்டாக மாற்றி விடு

புதிய ஆண்டதன் பிறந்த நாளிலே
பதிய உறவிலே மகிழ்ந்து வாழவே
உறவின் கரங்களாய் ஒன்று கூடவே
உரிமைகள் பெற்று மகிழ்ந்து வாழவே

மனித நேயம் மண்ணில் மலரவே
புனிதம் மனிதன் மனதில் வளரவே
அன்பின்பாதையில் பயணமாகவே
பாரினில் சாட்சியாய் கூடி வாழவே

வெற்றிகள் முழு மதியாய்
தோல்விகள் தேய் பிறையாய்
பூத்துக் குலுங்கும் தாரகையாய்
முயற்சிகள் அனைத்தையும் முளைக்க விடு

உன்னொளியால் நாநிலம் ஒளிர விடு
தீமைகளை எரித்து விடு
அக வாழ்வின் தூய்மையிலே
நம்பிக்கை வளர்த்து விடு
இறை ஆசிஅருள் பெருக
அருளும் பொருளும் கொண்டு
நலமாக வாழவிடு புத்தாண்டே,,,,,,
நன்றி வணக்கம்…….

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

    Continue reading