மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-272. தலைப்பு!

பள்ளிப் பருவம்
………….

கடந்த என்றன்
பள்ளிப் பருவம்
பதுங்குக் குழியிலே
பகைவன் குண்டு
மழையைப் பொழிந்தான்
எங்கள் தலையிலே!

மரமும் செடியும்
கொடியும் எங்கள்
பாட சாலையே!
மறக்க முடியா
பள்ளிப் பருவம்
சாவின் மடியிலே!

குபீர் குண்டுகள்
விழும் போது
படுப்போம் தரையிலே
பாடப் புத்தகம்
பட்டாம் பூச்சியாய்ப்
பறக்கும் வெளியிலே!

காக்கை குருவிகள்
கத்தும் ஓசை
காதின் வழியிலே
கதறி யடித்து
ஓடி ஒளிவோம்
வயலின் மறைவிலே!

போரின் சூழலில்
நாங்கள் கற்றதை
எவரும் மறுப்பாரா? – பகைவன்
போட்ட குண்டில்
செஞ்சோலைச் சிறுமிகள்
செத்து மடிந்தாரே!

அரைகுறை யாகப்
படிக்கும் நிலையில்
துயரில் உழன்றோமே
அன்னை தந்தை
உறவை இழந்தே
ஏதிலி யானோமே !

எங்களைப் போலப்
பள்ளிப் பருவம்
எவர்க்கும் வேண்டாமே! – எங்கள்
கனவில் கூட
அந்தப் பருவம்
வரவே வேண்டாமே!

நீரின் அலையில்
நீந்தி மறைந்து
நின்று நடுங்கினோம்
நெடுநாள் வரைக்கும்
அந்த நினைவை
எண்ணி வருந்தினோம்!

துள்ளித் திரியும்
பள்ளிப் பருவம்
என்றும் மறக்காதே!
தெள்ளத் தெளிவாய்க்
கல்வி கற்கும்
வாய்ப்பை இழக்காதே – உன்
வாழ்விலிது மீண்டும் வரும்
என்று நினைக்காதே!

மாதா பிதா
குரு தெய்வம்
வணங்க மறக்காதே!
பாட சாலை
செல்ல மறந்து
சுற்றித் திரியாதே – உன்
வாழ்வை உயர்த்தும் கல்வியை என்றும் இழக்காதே!

அபிராமி கவிதாசன்
02.07.2024

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading