தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

அழிவு

ராணி சம்பந்தர்

ஆதி கால மனிதன் பாதிக்காலம்
சோதிப்பிழம்பின் இயற்கையோடு
மனம் நிறைவாகத் துதி பாடினான்

விதிகால விஷம் மோதிடும் காலம்
வீதியிலே அனாதையாக அலம்பிட
நாதியற்ற கனத்த இதயம் செயற்கை
வினையிலே சதியையே தேடினான்

ஞாலம் பொறுமை இழந்தத கோலம்
அன்னை பூமாதேவி கொதித்துறுமிட
சும்மாதான் இருந்திடுமா ஆழும் பூமி

மழை வெள்ளம் கூட்ட வீடோ தகர்க்க
மலை பிழக்க விலை மதிப்பற்ற உயிர்
மண் சரிவிலே புதைந்து துறந்திடவே

மூடுபனி கொட்டோ கொட்ட நகர் முடங்க
வாயில் நுழையாத புதுப்புதுப் பெயரோடு
சுற்றிச் சுழலும் சூறாவளியில் அழிவுதான்.

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading