இதுவும் இடரானதே…

வசந்தா ஜெகதீசன்
இதுவும் இடரானதே…
வாழ்வியல் வனப்பின் இயற்கை வரம்
வசந்தமாய் சுகந்தமாய் இதமும் தரும்
காலத்தின் கணதியில் கலந்த இடர்
மழையின் பொழிவாய் மண்ணில் வெள்ளம்
வாழ்வின் இடராய் வந்ததே அவலம்
உயிர்கள் இழப்பும் உடமை அழிவும்
வாழ்விடமற்ற வலியின் துயரும்
தேடற்கரிய தேவை ஆதாரங்களும்
தொலைந்து போனதே இயற்கை இடரில்
பயிர்கள் அழிவும் படரும் வாழ்வும்
நிலைப்பட நாட்கள் நீண்டதாய் தேவை
மீண்டும் மிடுக்குடன் எழுந்திட உதவும் ஆதாரம்
உயிர்கள் வாழ நீங்கள் காட்டும்
கருணையின் நேயம்
மனிதத்தின்மகுடம்நன்றி

Author:

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading