பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

இரா.விஜயகௌரி

நிலை மாறும் பசுமை……….

பசுமையும் பயிர்களும் வளம் கொழிக்க
உயிர்களும் உயிர்ப்பும் வசமாகும்
நிலை தடுமாறும் மனிதர்களால் இன்று
வசந்தம் கானலின் ஊற்றாச் சே

இயற்கையும் இயல்பும் கைகோர்க்க
இங்கித வாழ்வில் எழில் கொஞ்சும்
இணையா நெறிமுறை பிறழ்ந்ததனால்
சூழலும் சுற்றமும் பாழாச்சு பரிதவிப்பாச்சு

புழுவும் பூச்சியும் சொந்தம் கொள்ள
நிதம் வானவில் எழிலுடன் எழும் மலர்கள்
செழிப்பின் சேமிப்பை உணர்த்தி எழும்
அழகை தொலைத்து நாம் நிலை குலைதந்தோம்

பசுமையின் புரட்சி வெடித்தெழட்டும்
பசுந்தரை யாவும் செழுமை கொஞ்ச
வாழும் வாழ்வே வரமாகும் அங்கு
உடல் உள நலங்கள் பலமாகும்

வசப்படும் பசுமையை வளப்படுத்தி அந்த
வரத்தின் செழுமையுள் வாழ்வு வெல்வோம்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading