ஒற்றை ஒளிவிளக்கில்….

வசந்தா ஜெகதீசன்
ஒற்றை ஒளிவிளக்கில்…
கிழக்கில் கதிரவன் விடியல் வரம்
கிடைக்கும் தருணங்கள் ஆற்றல் தரும்
சுழலும் உலகே எமக்கு வரம்
இரவும் பகலும் தருமே பலம்
கார்த்திகைத் திங்கள் ஒளிக்கோலம்
காசினி எங்கும் நினைவு நிஜம்
மதிப்புறு வீரத்தின் விழிதிறப்பு
வாஞ்சையில் வாழ்ந்தோர் வரவேற்பு
காந்தள் மலரால் கெளரவிப்பு
உயிர்க்கொடை உறவின் அர்ப்பணத்தை
எமக்காய் தம்முயீர்ந்த தன்முனைப்பை
ஏற்றல் செய்யும் கார்த்திகையே
ஒற்றைத் திங்களில் ஓங்குபுகழ்
வீரத்தின் விடுதலை தாங்கும் எழில்
மறவாது போற்றும் மதிப்பே வரம்
அணையாத் தீபத்தின் அகிலப்பலம்
மறவாது வாழ்வோம் மாற்றம்நிஜம்நன்றி.

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading