தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

கஞ்சா போதை……….

இரா.விஜயகௌரி

அஞ்சா நெஞ்சம் கொண்டலையும்
கஞ்சா போதையின் உள் நுழைவில்
விஞ்சிம் உந்தன் மேன்மைகளை
கொஞ்சமும் எண்ணா கஞ்சன் நீ

பஞ்சமும் பசியும் தலை விரிக்க
கொஞ்சும் மழலையும் பரிதவிக்க
கஞ்சா உந்தனின் தேடலிலே -நீ
தஞ்சமாய் தளர்ந்து நிலை குலைந்தாய்

அஞ்சுகம் அவளது அன்புனக்கு
கொஞ்சமும் நினைவில் எழவில்லை -உன்
கஞ்சா போதையின் ஏக்கம் மட்டும்
நிலைதடுமாறி கழிவரக்கம் தொலைத்த மகனாய் நீ

எஞ்சிய நாட்கள் கேள்வியிட
ஏதிலியாய் நீ பரிதவிக்க -தினம்
நாணிடும் பொழுதுகள் புள்ளியிட
கஞ்சா உனது காதலியோ

அழிவினை நீயே எழுதுகிறாய்
ஆக்கத்தின் நொடிகளை குழிபுதைத்தாய்
நாணிடும் செயல்களை உனதாக்கி
ஓடுவதெல்லாம் கஞ்சா போதைதனைத் தேடி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading