ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

கஞ்சா

ஜெயம் தங்கராஜா

கவி 732

கஞ்சா

தாழ்விலும் வாழுபவன் வாழ்க்கைக் கஞ்சான்
விழவிழ எழுகின்றவன் விதிக் கஞ்சான்
தடைகளைத்தாண்டி முன்னேறுபவன் விழுவதற் கஞ்சான்
போர்க்களத்தில் களமாடுபவன் மரணத்திற் கஞ்சான்

மூர்க்கன் முரடன் கொலைக் கஞ்சான்
பழிக்குப் பழிவாங்குபவன் பழிபாவத்திற் கஞ்சான்
குற்றம் இழைப்பவன் களவுக் கஞ்சான்
உண்மைகளை மறைப்பவன் நீதிக் கஞ்சான்

பாசத்தை புரியான் பெற்றோருக்
கஞ்சான்
அறிவினை பெறான் குருவுக் கஞ்சான்
பண்பினை அறியான் பெரியோர்க் கஞ்சான்
நிம்மதியை தொலைப்பான் கடவுளுக் கஞ்சான்

சொல்லால் வித்தைகாட்டுபவன் அவைக் கஞ்சான்
துணிந்து செயற்படுபவன் வருவதற் கஞ்சான்
இழப்புகளை நினையான் வருங்காலத்திற் கஞ்சான்
நன்மையே செய்பவன் கொடுப்பதற் கஞ்சான்

மனிதத்தை நேசிப்பவன் அர்ப்பணிப்பிற் கஞ்சான்
தேடலை தொடர்பவன் பயணத்திற் கஞ்சான்
வலிகளையும் வழிகளாக்குபவன்
துன்பத்திற் கஞ்சான்
போராளியாய் போராடுபவன் தோல்விக் கஞ்சான்

சிவன்கழுத்துப் பாம்பு கருடனுக் கஞ்சா
தாவுகின்ற குரங்கு விழுவதற் கஞ்சா
நீந்துகின்ற மீனும் பேரலைக் கஞ்சா
பாலைவனக் கீரி அரவத்துக் கஞ்சா

மதிப்பை தூக்கியெறிபவன் மரியாதைக் கஞ்சான்
வாழ்க்கையில் நடிப்பவன் மனச்சாட்சிக் கஞ்சான்
குடித்து வெறிப்பவன் ஊருக் கஞ்சான்
அடிப்பான் கஞ்சா விளைவுகளுக் கஞ்சான்

ஜெயம்
03-07-2024

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading