கவிதை நேரம்-05.09.2024 கவி இலக்கம்-1909 மாற்றம் ——–

Jeya Nadesan

கவிதை நேரம்-05.09.2024
கவி இலக்கம்-1909
மாற்றம்
———–
இயற்கையிலே மாற்றம் வரும்
பறவைகளோ இடம் பெயரும்
தமிழர் இஙு்கே புலம் பெயர்ந்தோம்
உடையிலே மொழியிலே மாற்றம்
கால கோலமதில் குளிர் வெயில் ஏற்றம்
மாற்றம் பெறின் இதமான பருவம் பெறுவோம்
உண்மையின் ஊடகமாய் தமிழில் வளர்வோம்
ஆக்கம் பலதும் எழுதி மாற்றம் கொள்வோம்
பன்மொழி படித்து பல நாடு செல்வோம்
பலதையும் பார்த்து மாற்றம் அடைவோம்
செய்யும் தொழிலிலே உழைப்பு பெறுவோம்
ஏணியாய் படிக்கல்லாய் வாழ்வில் உயர்வோம்
அரசியல் ஆட்சியிலே புதியதாக செய்வோம்
மாற்றம் பல செய்து மக்கள் தேவை கொடுப்போம்
ஏற்றம் பெறின் வாழ்வில் மாற்றம் கண்டு வாழ்வோம்
தோற்றமதில் மாற்றம் பெற்று
ஏற்றம் பெற்று வாழ்ந்திடுவோம்

Nada Mohan
Author: Nada Mohan