அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு287
விருப்ப தலைப்பு
“தோழா உனக்கு..,”
எழுந்து விட்டேன் தோழா !
விடிந்து விட்டதே பார்
முடிந்து விட்டதே தோழா
முடியாத துயரெல்லாம் நெஞ்சில்

காலங்கள் ஓடுவது அவசரமாய்
காரியங்கள் பலவுண்டு தோழா
கரைந்து போன நினைவுச்சுழல்கள்
கலங்கிப் போன கனவுக் குவியல்

உள்ளத்தை உரமாக்கி நீயும்
உணர்வுகளைத் தீட்டிக்கொள்
உலத்தின் வரைபடத்தில் தோழனே
உனக்கும் ஒரு இடமுண்டு

நேற்றைகளைத் தொலைத்தவர் பலர்
இன்றைகளைத் தவற விட்டு
நாளைகளுக்காய் ஏங்குகிறார்
நீயேற்றும் விளக்கின் ஒளி பரவட்டும்

கண்ணீர் எம் கன்னங்களில்
வரைந்த கோடுகளின் வலிமை
காலத்தை மாற்றி எழுதும்
வல்லமையை கைகளுக்கு கொடுக்கும்

உற்சாகத்தோடு புறப்படு தோழா !
உள்ளத்தில் ஆனந்த வெள்ளம் பாயட்டும்
இனியெமது காலமென்னும் கீதத்தை
இதயத்துள் உரக்கவே இசைத்திடு

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading