மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம் 286 ]
“மாற்றம்”

மாற்றம் உலகில் மாற்றமுடியாதொரு நியதி
உயிர்களின் வரலாற்றில் பரிணாமவளர்ச்சி ஒருவிதி
மனிதனின் தோற்றமோ யாரும் அறியாத காலம்
மாற்றங்களின் தொகையும் கூறமுடியாது யாரும்

நிர்வாணமாய் அலைந்து திரிந்த ஆதிமனிதன்
இன்று விதம்விதமாய் ஆடை அணிவதில் பிரியன்
அன்று பச்சையாய் உண்டு வயிற்றை நிரப்பியவன்
இன்றோ அறுசுவையுணவு சமைத்து உண்பவன்

குகைகளில் விலங்காய் அன்று வாழ்ந்தவன்
வசதிகொண்டமாளிகை இன்று அமைப்பவன்
பிறரோடு பேசிப்பழகத்தெரியாதவன்
இன்று தொலைதூரம் தொடர்புகொள்ள வல்லவன்

ஆட்சி அதிகாரம் பணம் பதவி வரும்போது
மனிதன்மாறவில்லை எண்ணத்தால் உயரவில்லை
முடியாட்சி முடிந்து குடியாட்சி இடம்பெற்றபோதும்
ஆட்சியமைக்க தேர்தல்கள் நடக்கும்போதும்

மனிதன் மாறவில்லை போட்டி பூசல் குறையவில்லை
புறத்திலவன் உயர்ந்தாலும் அகத்தில் என்றும் உயரந்ததில்லை
வளர்ந்த நாடுகள் என்பார்கள் அங்கும் ஒற்றுமையில்லை
அதிகார துஷ்பிரயோகம் ஊழல் லஞ்சம் தலைவிரித்தாடும்

காட்டுமிராண்டித்தனம் ஆட்சியை உலுக்கும்
ஆட்சிமாற்றம் வேண்டுமென்றே கோஷம் வலுக்கும்
மொத்தத்தில் மனிதன் மாறவில்லை
மனதால் அவன் என்னும் உயரவில்லை.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading