ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-48
15-10-2024

வெற்றிப் பயணம் மகனே

வெற்றிப் பயணமதை கேள் மகனே
வேண்டியதை செவியில் போட்டு விடு
படி எட்டு ஏணியில் நானேற
பதினாறில் பாம்பின் தலை இறக்கி விட

எட்டு எட்டாய் வாழ்வும் மாறி விட
எந்த எட்டில் வெற்றிப் பயணம் கண்டு பிடி
வெற்றி தோல்வி வீரனுக்கு அழகு தானே
வேறு பல வழி தேறி வர கேள் மகனே!

தன்னம்பிக்கையை விதைத்திடு
தாழ்வு மனப்பான்மையை ஒழித்திடு
பயத்தினை உடைத்தெறிந்திடு
இலக்கினை நோக்கி அடியெடுத்திடு

தோல்வியை திருப்தியாய் வரவேற்றிடு
திட்டமிட்டு இலக்கை நகர்த்திச் சென்றிடு
தோல்வி கண்டு துவண்டு விடாதே
வெற்றிப்பயணம் உன் கையில் மகனே!

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading