திசைகாட்டி 682

Selvi Nithianandan 03.10.2024.

திசைகாட்டி

மெல்லென அகரத்தை கற்றுத்தந்து
மேலாய் வகுப்பிலே ஒழுக்கமும்
தேடலில் நோக்கம் சிறப்பாயும்
தேர்விலே ஊக்கம் திடமாகும்

ஏற்றம் கண்டும் ஏணியாய்
ஏற்றிய ஆசான்கள் பலவாய்
ஆழமாய் கற்றும் சீராய்
ஆசிரியம் கிடைத்த வரமே

புவனத்தில் திசைகாட்டி பலராய்
புனிதத் தொழிலாய் ஆசிரியமும்
புலத்தில் தொண்டாய் இணைந்தே
புகழ்ச்சியின்றி சேவை நன்றே

ஆசிரியப் பணியும் அற்புதம்
அவனியிலே சிறநத ஆணிவேராம்
ஆயிரம் வசதிகள் வந்திடினும்
அனுதினம் அகத்திலே உலவுவாரே

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

Continue reading