“திசை காட்டிகள்”

நேவிஸ் பிலிப் கவி இல(149) 03/10/24

பாதைகள் பல கண்டு
நற் பயணம் நாம் தொடர
நல் வழி காட்டிடும்
திசை காட்டிகள்

விடியல் காட்டிடும் ஒளியாய் -நாம்
அகரம் கற்று சிகரம் தொட
எழுத்தாணி காட்டி எம் விரல்
சுழல் விட்ட அச்சாணிகள்

சிதையுண்ட கற்கள் சிலையாதல் போல
அறிவென்னும் உளி கொண்டு
மூடிக் கிடந்த மனத்திரை கிழித்தெறிந்து
இலட்சியமென்னும் முத்திரையை
நெஞ்சிலே பதித்திட்ட சுடரொளிகள்

அறிஞராய் ,கலைஞராய் மருத்துவராய்
பண்டிதராய், பண்பாளராய்
நம்மை வளர்த்தெடுத்த
நல் வழி காட்டிகள்

சான்றோன் என்ற பெயரோடு
மேலோங்கி எங்கோ நாம் நிற்க
ஏற்ற விட்ட ஏணியென
அடுத்த நம் தலைமுறைக்காய்
காத்திருக்கும் எம் ஆசான்கள்

ஆண்டுகள் பல கடந்திடினும்
அழியாப் புகழ் கொண்டிடினும்
நன்றியோடு வாழ்திடுவோம்
அவர் நினைவில் நிறைந்திடுவோம்
நன்றி வணக்கம்
நேவிஸ் பிலிப் (பிரானஸ்)

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

Continue reading