துறவுகள் பூண்ட உறவுகள்-2087 ஜெயா நடேசன்

இல்லறமே நல்லறம் என
வாழ்ந்த உறவுகள்
வீட்டு உறவுகளை விட்டு
போதை களவு பாலியல்
ஊழல்கள் மூழ்கி இறப்பில்
உறவுகளை பிரிந்து தனித்து
வாழ்க்கை சிறைகளில் சிதைந்து
ஆன்மீக வாழ்வில் தனி வாழ்வில்
மத நம்பிக்கைக்குள் புகுந்தவர்
ஆசை பாசம் உலக இன்பங்கள் விட்டு
ஆன்மீக ஈடேற்றத்தில் துறவு
மனிதம் மதிக்கப்பட்டு
மனித மாண்பு பாதுகாக்கப்படட்டும்
நாளும் பொழுதும் நண்பராய் வாழ்ந்து
நல்லுள்ளம் படைத்தவராய் திகழ்ந்து
நன்மை செய்து நலமுடன் வாழ்வோம்

Author:

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_208 "பூமி" சுற்றும் பூமி சுழலும் பூமி பூ கோளம் யார் போட்ட கோலம்! அம்மா என்னை சுமந்தாள் கண்ணியமாய் கருணை...

Continue reading