“துறவு பூண்ட உறவுகள்”

நேவிஸ் பிலிப் (கவி இல512)

உறவுக்கு உயிருண்டு
உயிரையும் கொடுக்கும் பற்றுண்டு
உயிருக்கு சிறகுண்டு தூரப் பறந்து
துணையாகும் மனமுண்டு

ஒற்றுமையாய் வாழ்ந்தோம் அன்று
துறவிகள் போல் பற்றின்றி
தனித் தனித் தீவுகளாய்
பிரிந்து வாழும் பரிதாபம் இன்று

உறவுகள் சங்கமிக்கும் உயிர் நாடியில்
சேறும் சகதியும் அப்பிக் கொள்ள
உறவு நரம்புகளில் தூசி படிந்து
இனம் சனம் தெரியாது உறங்கிக் கிடக்கு

அன்பு பாசம் கருத்திழந்து
அறிவும் தெளிவும் மரத்துப் போக
கொடிய சிந்தனை செயலும்
பழிப்புரையும் பழி வாங்கலுமாய்

மூதாதையரில் இருந்த
ஐக்கிய மனப்பான்மை புரிந்துணர்வு
முனைப்பான இலட்சிய அவா
எம்மவர் மத்தியில் வீழ்ச்சிகாண
துறவுக் கோலம் பூண்ட உறவுகளே
காரணமாம்….
நன்றி

Author:

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_208 "பூமி" சுற்றும் பூமி சுழலும் பூமி பூ கோளம் யார் போட்ட கோலம்! அம்மா என்னை சுமந்தாள் கண்ணியமாய் கருணை...

Continue reading