துறவு பூண்ட உறவுகள்

இரா விஜயகௌரி
வரவும் செலவும் வாழ்வில் நியதி
உறவும் உயிர்ப்பும்உயிர்த்துணை தினமும்
கரையும் கண்ணீர் கரைந்து இழைய
எழுதிய உணர்வில் வாழ்ந்தவர் நாங்கள்

தேடித்தேடி உறவின் கைகளை
நாடித்தவிப்போர் இடர்தமை களைந்து
எழுதாவேதம் வாழ்வினில். இழைத்து
எழுதிய மூத்தோர் வழித்தொடர் நாங்கள்

கண்டும் காணா இருளினில் நாளும்
உயிர்ப்பினை இழந்து உறவினைத்தொலைத்து
வாடும் பயிர்க்கு நீரிட மறந்து
நாளும் வாழ்தலில் பயனென் சொல்வாய்

கணத்தினில் முடியும் ஜகத்தினில் வாழ்க்கை
இதயம்தொலைத்த மானிட ஜீவிதம்
கசிந்து எழுதிடில் வாழ்வே அழகு
உணர்ந்தும் உணரா வாழ்வது எதற்கு

Author:

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_208 "பூமி" சுற்றும் பூமி சுழலும் பூமி பூ கோளம் யார் போட்ட கோலம்! அம்மா என்னை சுமந்தாள் கண்ணியமாய் கருணை...

Continue reading