துறவு பூண்ட உறவுகள்….

வசந்தா ஜெகதீசன்
வற்றிப் போகுது உறவுமுறை
வரட்சி காணுது தொடரும் நிலை
விருந்தோம்பல் குன்றியே போகுது
வீட்டிற்கு வருவோர் குறைந்து செல்லுது
தொடர்பாடல் தொலைந்து காலமாய்
தொன்மைகள் மறக்கப்பட்டதாய்
இழந்தவை இருப்பிடமற்றதாய்
புலமது பெயர்ந்தோம் நிலமது துறந்தோம்
அருகாமை தொலைவானது
ஆட்பலம் தேய்பிறையானது
துறவு பூண்ட உறவுகளாய்
நலிவு கொண்டதே நமதினம்
நம்பிக்கை குன்றிய நமதுபலம்
நாட்டுக்கு நாடாய் நம்சொந்தம்
ஆபத்துக்கு உதவாத உறவாச்சு
அடிக்கடி காணாது அன்பு போச்சு
பாசம் நேசம் வேஷமாச்சு
பாரெங்கும் இதுவே தொடராச்சு
பழகிடும் நட்புகள் வேஷமிட
பாரினில் உறவுமுறை உருக்குலைய
நேசமும் உறவும் விலகியது
நிர்கதி வாழ்வே நிரந்தரமாய்
நிமிடங்கள் விலகுதே நெடும் தொலைவாய்! நன்றி மிக்கநன்றி

Author:

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_208 "பூமி" சுற்றும் பூமி சுழலும் பூமி பூ கோளம் யார் போட்ட கோலம்! அம்மா என்னை சுமந்தாள் கண்ணியமாய் கருணை...

Continue reading