Sunrise news

நவராத்திரி விழா

நவராத்திரி விழா

நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவியரை வழிபட்டால் ஒப்பற்ற வாழ்க்கை அமையப்பெறும் என்பது நம்பிக்கை.

சிவனுக்கு உகந்தது ‘சிவராத்திரி’. அதேபோல அம்பிகையை கொண்டாட உகந்த நாள் ‘நவராத்திரி’ ஆகும். ‘நவம்’ என்றால் ‘ஒன்பது’ என்றும், ‘ராத்திரி’ என்றால் ‘இரவு’ என்றும் பொருள்படும். ஒன்பது இரவுகளில் அம்பிகையை கொண்டாடி, விரதம் இருந்து வழிபட்டு வந்தால் பொன், பொருள்கள் குவியும் என்று சாஸ்திரம் சொல்கிறது.

புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கி ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழா புரட்டாசி மாதம் 6-ம் நாள் (22.9.2025) அன்று ஆரம்பமாகிறது.

எனவே தான் ‘வீரம்’ தரும் துர்க்கா தேவியை முதல் மூன்று நாட்களும், ‘செல்வம்’ தரும் லட்சுமியை அடுத்த மூன்று தினங்களும், ‘கல்விச் செல்வம்’ தரும் சரஸ்வதியை அடுத்த மூன்று நாட்களும் முறையாக பூஜை செய்து வழிபட வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அவ்வாறு வழிபட்டால் இல்லத்தில் சுப நிகழ்வுகள் ஏராளமாக நடைபெற தொடங்கும் என்பது முன்னோர் வாக்கு.

தேவியின் அருள் கிடைக்க தேவர்கள் கடும் தவம் செய்தனர். இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகிய மூன்று சக்திகளின் பேரருளையும் பெற முயற்சி எடுத்தனர். தேவர்கள் உடலை அசைக்காமல் தவம் செய்த நாட்களில் எல்லா வஸ்துகளும் அசையாமல் இருந்தன. அதன் நினைவாக கொலு வைத்துக் கொண்டாடுகிறோம்.

Jeba Sri
Author: Jeba Sri