புதிதாய் ஒன்று..

வியாழன் கவி 2253

புதிதாய் ஒன்று..

உழலுகின்ற பூமியம்மா
உதயமாய்த் தரப் போகிறா
ஈற்றின் மாதம் வந்துவிட
இன்னும் சில நாட்கள்
புத்தாண்டாய் மலருமே
பழையன கழிவதும்
புதியது மலர்வதும்
இதுவே கதையாய்ப் போக
எத்தனை எதிர்பார்ப்பு
எத்தனை ஏமாற்றம்
அத்தனை புதுமைகள்
அடுத்தடுத்த அழிவுகள்
வாழ்க்கை என்னும் வட்டம்
வாய்த்திடும் சில திட்டம்
சதியை மெல்ல மாற்றி
விதியை வெல்லுவீரே
வந்திடும் புதிய யாவும்
வரமாய் மாறட்டும் இங்கே
சிவதர்சனி இராகவன்
4/12/2025

Author:

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading