மகிழ்ச்சியின் ஓசை

ஜெயம்

வாழ்க்கையின் பாதையில் சின்ன சிரிப்புகள்
வாழ்நாள் பரிசாகும் மகிழ்ச்சியின் வரவுகள்
பாசத்தின் தொடுகை பகிர்ந்திடும் அதனை
நேசத்தின் வண்ணம் மலர்விக்கும் இதனை

வீசும் காற்றும் மலர்தொட்டு மகிழ்ச்சி
பேசும் பறவைகள் காதலால் மகிழ்ச்சி
அலையும் அலையும் கரைகண்டு மகிழ்ச்சி
மழைகண்டு உயிரினம் அசைந்தாடி மகிழ்ச்சி

மனமதில் மலர்ந்திடும் மகிழ்வெனும் சுகம்
தினத்துக்குள் சந்திக்க நிம்மதி உருவாகும்
மகிழ்ச்சி ஒரு சிறந்த கதை
மகிழ்வெனும் உணர்வே உற்சாக விதை

இதயத்தில் தோன்றினால் சந்தோச ஒளி
உதயமாம் அங்கே மகிழ்ச்சியின் வழி
இயற்கையின் ஒவ்வொரு அசைவிலும் மகிழ்ச்சி
உயரிய உள்ளங்கள் உறவானால் மகிழ்ச்சி

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading