ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

மண்வாசம்

Jeya Nadesan

ஆகவிதை நேரம்-04.07.2024
கவி இலக்கம்-1886
மண்வாசம்
—————–
அழகிய எம் தாய் நாடே
பனந்தோப்பும் தென்னம் தோட்டங்களும்
வளவு நிறைந்த பப்பா மா பலா வாழை மரங்களும்
வேலி நிறைய கிளுவை முருங்கை செம்பரத்தியும்
முற்றத்து வேம்பும் மல்லிகை பந்தலும்
ஊரில் இருந்தபோது சற்றும் நினைத்தும்
உயர்வாக அதன் அருமை தெரியவில்லை
உறவுகள் தந்த சுகம் தெரியவில்லை
பழமைகள் கற்று தந்த பண்பாடு
அப்பா வைத்த தென்னை மா மரங்களும்
ஆச்சி நாட்டிய மல்லிகை பந்தலும்
அதன் வளர்ச்சியில் மனதுள்ளே முகிழ்ந்தது
வீட்டு கூரையிலிருந்து தாழ்வார மழைச்சாரலும்
அணில் வெளவால் கொந்திய மாம்பழமும்
பழுத்து விழும் தென்னோலையும்
தாகம் தீர்க்க இளநீரும் நுங்கும்
நெருஞ்சி முள்ளாய் குத்தியதே
கூடி வாழ்ந்த நினைவுகளும்
அறுவகை சுவையுடன் விருந்தோம்பலும்
பச்சை பசேலென நெல் வயல் காணியும்
இன்று மண்வாசனை அறிந்து அனுபவிக்க
உரிமைக்குரிய அப்பாவுமில்லை தாயாருமில்லை

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading