அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

மாதவமே உந்தனை

ஜெயம் தங்கராஜா

கவி 751

மாதவமே உந்தனை

சாவைக்கொடுத்தேனும் இனத்தை மீட்கத்துடித்தார்
நோவை சுமந்தே மீட்புப்போருக்காய் குதித்தார்
குலத்திற்கு கிடைத்திட்ட மாபெரும் வரப்பிரசாதங்கள்
நிலத்தை பாதுகாத்த இரும்புக் கரங்கள்

தேசம் என்பது இவர்களின் கனவானது
பேசும் தாய்மொழி இவர்களின் உணவானது
அதிகாரத்தின் அடக்குமுறைக்கு வைக்கவே முற்றுப்புள்ளி
குதித்து எழுந்தனர் வரிப்புலியெனத் துள்ளி
சாதனை படைத்திட்ட சரித்திரப் போர்
சாவினைத் தழுவினும் வரலாறு கொண்டார்
சிதைக்கப்பட்டார்கள் அவரென எதிரிகள் கொக்கரிக்கலாம்
விதைக்கப்பட்ட விதைகளவர் மீண்டும் எழலாம்

கார்த்திகை மாதம் சோகத்தை கதைக்கின்றது
நீர்த்தவர் நினைவுகள் நெஞ்சினை வதைக்கின்றது
அடைவதற்கு இவர்களை தவமென்ன செய்தோம்
கிடைத்திட்ட வரங்களை ஒவ்வொன்றாய் இழந்தோம்

தியாகங்கள் ஒவ்வொன்றும் மண்ணுக்காக காவியம்
மயானத்தில் உறங்கிடினும் வாழுகின்ற சீவியம்
வணங்குகின்றோம் வாழ்துகின்றோம் மாவீர செல்வங்களே
இனங்காக்க இறுதிவரை உழைத்த தங்கங்களே

ஜெயம்
27-11-2024

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading