மாற்றம்

சிவதர்சனி

வியாழன் கவி 2021!

மாற்றம்..!

மாறாமல் நின்று கொள்ளும்
மாற்றம் உலகை வெல்லும்
நொடியும் கணமும் மாற்றம்
நோக்கமும் கொண்டது மாற்றம்..

உலகின் தோற்றத்தில் மாற்றம்
உள்ளத்தின் அன்பில் மாற்றம்
உண்மை நட்பில் மாற்றம்
உறங்கும் நேரத்தில் மாற்றம் ..

கல்வியிலும் கலைகளிலும்
கட்டுப்பாடு நேரங்களிலும்
உணவின் ஆக்கத்திலும்
உயர்வின் நோக்கிலும் மாற்றம்.

காலை உதயத்திலும்
கருத்தான பேச்சிலும்
வெற்றிப் பேற்றிலும்
வெறி கொண்ட போக்கிலும்
உண்டேமாற்றம்..
சிவதர்சனி இராகவன்

Nada Mohan
Author: Nada Mohan