மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

11.07.23
கவி இலக்கம்-109
பாட்டி

குழந்தை ஒன்று பிறக்கையில்
கூடவே பாட்டியும் புதிதாய்ப்
பிறக்கிறாள் என்றாரே
பெண் கவிஞர் அலைஸ் வாக்கர்

பட்டுப் புடவையை கொசுவமிட்டு
உடுக்கும் பாட்டியும் சரிகை
வேட்டி மீசைத் தாத்தாவும்
கூட்டுக் குடும்பமானால்
குதூகலமே

பாட்டி சுட்ட வடையைக்
கோட்டை விட்ட காக்கா
எடுத்துக் கொண்டு காட்டுள்
ஓடிய தந்திர நரி கதை
கேட்டதும் ஆனந்தமே

போட்டி நாட்டும் பழமொழி
வாட்டி விடும் விடுகதை
சொடுக்குப் போட்டால்
சிறுவருக்கு இரட்டிப்பு
மகிழ்வே

தடுக்குப் பாய் உழைத்து
தம்பி தங்கை அதில் கிடத்தி
பார்த்துச் சிரிக்கும் புன்னகை
பாட்டிக்கும் பேரானந்தமே

கொட்டைப் பாக்கு வெற்றிலை
போட்டு கட்டை விரல் அமத்தி
உரலில் இடித்து பொக்கை
வாயில் சப்பித் துப்பும்
பாட்டியின் அழகுச் சிரிப்போ
அழகு .

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading