வசந்தா ஜெகதீசன்

ஒளியிலே தெரிவது....

ஒளியிலே தெரிவது….
அழகியல் அவனி ஒளிர்கிறது
அனுதின வாழ்வாய் மிளிர்கிறது
சடுகுடு ஆட்டம் நிகழ்கிறது
சம்பவத் திரட்டாய் தொடர்கிறது

ஒளியினில் அகமே ஒளிர்வாகும்
ஒங்குபுகழாய் மலர்ச்சி பெறும்
ஒற்றுமை உலகை விரிவாக்கும்
ஒளிக்குள் ஒளியே உலகாளும்

காரிருள் விலகிட கண்துயின்றார்
கடமையின் உயிர்ப்பில் வென்றுயர்ந்தார்
கார்த்திகை மைந்தர்கள் கல்லறைகள்
ஒளியினில் ஒளிரும் திங்களிது
ஓர்முகப் பார்வையின் விடியலிது

அறிவொளி ஒளியாய் பிரகாசம்
அகலொளி ஏற்றிய ஒளித்தீபம்
கல்வியின் விதைப்பே விளக்கமாகும்
கலங்கரை விளக்காய் சுடரேற்றும்

ஒளியற்று உலகே ஒளிராது
ஒளிரும் வாழ்வே உலகமயம்
அணிசேர் ஐக்கிய புவிக்குள்ளே
ஆவதும் அழிவதும் அதன்செயலே
ஆக்குதிறனின் முதற்படியில்
அடித்தளமாவது ஒளிமுதலே
விடியலின் விளக்கொளி கிழக்காகும்
விதைப்படும் விற்பனம் இலக்காகும்.!
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

Continue reading