விரல் நுனியில் அறிவியல்

Selvi Nithianandan விரல் நுனியில் அறிவியல் (674)

விரல் நுனியில் அறிவியல்

விந்தையான தொழில்நுட்பம் வியப்பாகுது
விருப்புடன் விரல்நுனியிலே விளையாடுது
விசும்பிலே பலவகையான விற்றலும்
விரும்பியே பலதும் கற்றலாகும்

மண்ணிலும் விண்ணிலும் சாதிப்பு
மகத்தான பலவகை கண்டுபிடிப்பு
மதிப்புமிக்க பொருட்கள் விற்பனை
மதிநுட்பத்தால் கற்பனை சிறப்பாகும்

சிறுவர்முதல் பெரியவரிடை மோகம்
சிறுசுகளும் கற்றுதேறும் வேகம்
ஆளுமையில் நாடுகளிடை தாகம்
ஆற்றலும் அறிவியலும் விரலிடை தஞ்சமாகும்

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

Continue reading