அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

ஷர்ளா தரன்

ஆயிரம் சொல் இருந்தென்ன
ஆசான் என்ற சொல்
ஆயுள் உள்ளவரை வந்திடுமே

அலைந்து திரிந்து
அகப்பட்டதை பொறுக்கி
நளினத்துடன் நகைச்சுவையாய்
நசுக்கென்று மண்டையில் ஏற
நல்லவற்றை கற்பித்து
நல்லவனாய் வாழ வைத்து
தெய்வமாய் வாழ்கின்றவர்கள்

ஏற்றம் இறக்கம் பார்க்காது
உணவு இடைவேளை இன்றி
ஊக்கமுடன் ஊட்டி விட்டவர்கள்
அறிவுப்பசியை காட்டிவிட்டவர்கள்

கற்றவரோடு கலந்துரையாட
அறிவு தந்தவர்கள்
பெற்றோருக்கு அடங்காதவர்
ஆசானுக்கு அடங்கியவர்

வானால் குண்டு மழை
காதை கிழிக்கும் வெடிஓசை
உயிர் காக்க பதுங்கு குழி
ஊடறுத்து கல்வி
ஊக்குவித்த ஆசான்
அறிவை ஊட்டிவித்த ஆசான்

ஷர்ளா தரன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading