சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு தாயகத்தில் தனி உறவு ஐந்துபத்து வயதில் ஆட்டம்போட்ட நாட்டுல நொந்துமனம் விட்டுதான் நாட்டை விட்டோம் ரோட்டில ஆண்டுகள் முப்பது அண்டைநாடு அடைக்கலம் வேண்டினோம் விரும்பினோம் வேதனையோ குறையல சொந்தநாட்டு சொந்தமொன்று சோகத்தோடு காட்டுல வெந்து வெந்துவழியின்றி வேதனையில் தவிக்குதாம் நீச்சலடித்த ஆற்றிலே நீர் குறைந்து விட்டதாம் பாச்சலிட்ட பதுங்குகுழி பாதை மறந்து போனதாம் கூடுகட்டி வாழ்ந்த சொந்தம் கூண்டோடு பெயர்ந்ததாம் வீடுகட்டி வாழ்ந்திடும் வாழ்வுநிலை இல்லையாம் ஊருக்குள்ள அகதி என்று ஒரு கூட்டம் பேசுதாம் பேருக்காக வந்ததாக பெரும்வதந்தி பரப்புதாம் சொந்த நாடு வந்தாலும் சோதனை கோலமென்று சிந்தாத கண்ணீரை சிந்திமனம் நோகுதாம் என்றுதீரும் சோகமென்று என்சொந்தம் பாடுது ஒன்றாய் கூடிவாழ்ந்த உறவுகளை நாடுது தாயக தீவினில் தனிஉறவு கூடது மாய உலகினில் மனிதனை தேடுது நன்றி வணக்கம் கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு தாயகத்தில் தனி உறவு ஐந்துபத்து வயதில்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

21.07.22 ஆக்கம்-235 போற்றிடும் நெற்றியடி எத்தனை சோகம் இத்தனை வயதில் அத்தனையும் எழுதமுடியாது ஏக்கமுடன் பெருமூச்செறிகிறது பேனா ஏதிலியாய் எங்கு...

Continue reading

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

*****ஆடிப்பட்டம் தேடிவிதை***** காலம் கனிந்திருக்கு கண்மணிகாள் வாருங்கடி கூலம் விதைத்திடலாம் கூடி குலவுங்கடி ஞாலம் விரிந்திருக்கு நல்மணியை...

Continue reading