அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

Jeya Nadesan

கவிதை நேரம்-12.05.2022
கவி இலக்கம்-1509
நிலை மாறும் பசுமை
—————————
இயற்கையிலே மாற்றம் வரும்
பறவைகளோ இடம் பெயரும்
எவர் அளித்த மாற்றத்தினால்
மானிடர்க்கோ கேடு வரும்
வைகாசி விடியலின் வனப்பில்
பச்சை பசேலென அழகுற காட்சி தரும்
வண்ண வண்ண பூக்கள் மலரும்
காடு வெட்டி காசாக்கி பணம் சேரும்
கட்டிடங்கள் உருவாகி உயர்வாகும்
சுற்றுச் சூழல் அதி வெப்பமாகும்
பயிர்கள் எல்லாம் கருகி போகும்
காட்டுத் தீ பரவி உயிரினங்கள் அழிவாகும்
மழையை வழங்கும் வானமாம்
கடும் மழை வெள்ளமாகி அழிவு தரும்
நிலைமாறி பயிர் உயிர்களை கொல்லும்
வீட்டு தோட்டம் வளர்த்து பசியை போக்குவோம்
வீட்டிற்கு ஒரு மரம் வளர்த்து சுற்றாடல் காப்போம்
ஆரோக்கிய வாழ்விற்கு வழி வகுப்போம்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading