அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

மாற்றம்
ஃஃஃஃஃ

மாற்றம் மாற்றம் மனிதம் சிறந்திடவே மாற்றம்//
மகிமை பொங்கிட மானிலம் சிறந்திட மாற்றம்//

மனநீதி துலங்கியே மக்கள் வாழவே மாற்றம்//

மகிழ்வுடன் நின்று அயராது உழைக்கவே மாற்றம்//

மரியாதை கொண்டே மனிதனாய் வாழநினைப்பதே பெரும் மாற்றம்//

காசினி குளிரட்டும் பயிர்கள் செழிக்கட்டும்//
காலத்தில் நல்ல மாற்றமும் தோன்றட்டும்//

பஞ்சம் பசிபோகட்டும் பாவிகள் நிலையும் மாறட்டும்//

வீசும் காற்றே தூது சொல்லு சுதந்திரமாய்
வாழ்வோமென்று//

அடிக்கும் அலையே நின்று கொள்வாய்//

அலையாயும் மனதுக்கு மாற்றமொன்று தரூவாயே//

வலையும் வீசி நின்றிடுவேன் மாற்றம் வேண்டியே இழுப்பதற்கு//

விலையும் இல்லை மாற்றம்பெற மனமும் வேண்டும் புரிந்துவிடு //

சிவருபன் சர்வேஸ்வரி
✍✍💐🐚

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading