பேரிடரின் துயரமே (741) 04.12.2025

செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதே சோதனை கலங்கிய மானிடரின் கண்ணீரின் வேதனை காற்றுடன்...

Continue reading

பேரிடரின் துயரமே (741) 04.12.2025

செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே

காலநிலை மாற்றத்தால்
ஏற்பட்டதே சோதனை
கலங்கிய மானிடரின்
கண்ணீரின் வேதனை

காற்றுடன் மழையும்
தாக்கமாய் இருக்க
வீடுகள் வெள்ளத்தால்
தண்ணீரும் தேங்க

ஓடவுவோ ஒழியவோ
முடியாமல் போனதே
ஒற்றைக் கொப்பிலே
உயிரைக் காக்கவே

குளங்களும் உடைத்து
தெருவெல்லாம் பாய்ந்திட
குடைகளைப் பிடித்து
வேடிக்கை பார்திட

மண்சரிவு ஒருபுறம்
மரணத்தை தொடவே
மயானமும் இல்லாது
மண்ணுக்குள் புதைந்ததே

மனிதநேயம் மடிந்து
மாக்களாயும் மானிடம்
மாற்றுவழி கண்டும்
புண்ணியம் தேடலாம்

Author:

தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

Continue reading