விண்ணிலிருந்து ஓர் விடியல்-2131 ஜெயா நடேசன்

விண்ணிலிருந்து ஓர் அற்புத விடியல்
மண்ணை முத்தமிட பாடி மகிழ்ந்திட
எம்மை தேடி வருகின்றது
பொய்மையிலிருந்து உண்மைக்கும்
இருளிலிருந்து ஒளி நிலையில்
அழிவிலிருந்த மீட்டெடுக்க
அற்புதமாக வால் வெள்ளியானது
அன்னை மரியா உதரத்தில்
அற்புத மகனாய் மலர்ந்ததே
மங்காத ஒளி மக்கள் மழையாய்
அருட்கொடைகளை அள்ளி தர
வானவர் கீதம் பாட மானிடரை தேடி
ஒளியாக நல்வழியாக பல வழியாக
அன்பாக அருளாக கொடையாக
துயர் துடைத்து விடியல் தந்திட
விண்ணிலிருந்து தேடி வருகிறது

Author:

வசந்தா ஜெகதீசன் இன்று பாரதி இருந்திருந்தால்... புதுக்கவியாளன் பாரதியே படைத்தெழு படைப்பே பாரெங்கும் முனைப்பென எழுச்சியை எழுத்தாக்கும்...

Continue reading