மாற்றத்தின் ஒளியாய்-2140 ஜெயா நடேசன்

புத்தாண்டின் விடியலில் பொங்கியே புத்தொளி மலரட்டும் புதுப் படைப்பாகி புது யுகம் சிறக்கட்டும் புவியாழும் இறையோனின் பார்வையாய் இருளான...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்

ராணி சம்பந்தர் மாற்றத்தின் ஒளியாய்த் தங்கியே மலர்ந்திடுவாய் முற்றத்திலே சுற்றமோடு பொங்கி மகிழ்ந்திடுவாய் வற்றா ஊற்றாய்ப் புலரும் சூரியனை வரவேற்றிடவே சுற்றவரக் கோலமிட்டிட முக்கல்...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்-2140 ஜெயா நடேசன்

புத்தாண்டின் விடியலில்
பொங்கியே புத்தொளி மலரட்டும்
புதுப் படைப்பாகி புது யுகம் சிறக்கட்டும்
புவியாழும் இறையோனின் பார்வையாய்
இருளான வாழ்வு ஒளியாக மாறட்டும்
புலர்ந்த ஆண்டில் புது விடியல் பிறக்கட்டும்
பெறெடுத்த பிள்ளைகள் வாழ்வில் மலரட்டும்
பெற்றோரை வணங்கி கடமையில் சிறக்கட்டும்
உலகத் தலைவர்கள் அரசியலில் மாற்றம் பெறட்டும்
நாட்டில் ஒற்றுமை சமாதானம் நிலவட்டும்
புத்தாண்டு விடியிலில் ஒளி பிரகாசிக்கட்டும்
புவியோர் மாற்றம் பெற்று புது வாழ்வு வாழட்டும்
சத்தங்கள் இல்லாமல் இன யுத்தங்கள் வெடிக்காமல்
புத்தாண்டு பொங்கலின் விடியலில் ஒளி பிறக்கட்டும்

Author: