மாற்றத்தின் ஒளியாய்

இரா.விஜயகௌரி மாற்றத்தின் ஒளியாய் மனங்களுள் தெளிவாய் ஏற்றத்தின் படியாய் துலங்கிடும் எழிலே காலத்தின் மாற்றம் கனிந்திடும் பொழுதில் தொடுத்திடும்...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்

இரா.விஜயகௌரி

மாற்றத்தின் ஒளியாய்
மனங்களுள் தெளிவாய்
ஏற்றத்தின் படியாய்
துலங்கிடும் எழிலே

காலத்தின் மாற்றம்
கனிந்திடும் பொழுதில்
தொடுத்திடும் செயலை
மாற்றிடும் துணிவே

ஞாலத்தின் கடவுள்
ஞாயிறு மகனார் அவர்
தாழ்களில் பணிந்தே
காலத்தை வெல்வோம்

நித்தமும் உழைக்கும்
தோள்களைத்தழுவி
உழைப்பினை ஏற்றே
உயர்வினை வெல்வோம்

எழிலொடு மாற்றம்
ஏந்திடும் கரங்கள்
அகிலத்தின் ஒளியை
வணங்கியே எழுவோம்

Author: