மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

மாதரின் மறுபக்கம்

வியாழன் கவி 2304

மாதரின் மறுபக்கம்..

நாணயத்தின் இருபக்கங்கள்
நாணயமாய் மாதரின் மறுபக்கங்கள்
அன்று தொட்டு இன்று வரை
அழகியலாய் வர்ணனை வரைபடமாய்

விளம்பரங்களும் விற்பனை உத்தியும்
ஆடைகளும் அலங்கார நிலையமும்
ஆவி பறக்க சமையலும் சாப்பாடும்
அத்தனையும் மாதரை நினைவூட்டியதே

வானும் நிலவும் ஆறும் நதியும்
அலைகடலும் அன்னை வடிவம் என்றார்
அந்த மாதருக்கு இழைத்த துயரமுடன்
கட்டுக்களுடன் இறக்கை வெட்டியபடி

மாதர் விழித்தெழுந்து வினயமாக்கி
விரயமாகா ஆடவர் உழைப்பை உயர்த்தி
வீடும் நாடும் வளம் பெற முன்னோக்கி
தன்பலம் தானுணர்ந்தாள் நிமிர்ந்தாள்

கைவிடப்பட்ட அபலைகளும் வாழ்ந்தார்
கருத்தரித்த மக்களை சிகரமேற்றினார்
ஆளுமையில் அகராதி அமைத்தார்
மறுபக்கமுண்டு மனிதா மாதருக்கும்..
சிவதர்சனி இரா
11/3/2026

Author:

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading