Selvi Nithianandan

ஆசான்

அறிவு என்னும்
ஆற்றல் கிடைக்கும்
அன்பு அரவணைப்பு
ஆளுமை நிறைக்கும்

அன்னை தந்தைக்கு
அவரும் நிகரே
அகிலத்தில் ஆசானே
அரும்பெரும் வரமே

அகரமே. வழிகாட்டி
சிகரமாய் அறம்மூட்டி
அகமும் மெருகூட்டி
உலகிற்கு திசைகாட்டி

ஏட்டு கல்விக்கும் கூட
நோட்டு இப்போ தேவை
ஆட்டு மந்தை போல
றோட்டுமூடி சேவை

(தாயக நிலை)
செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம்_207 "அந்திப் பொழுது" செவ்வானம் சிவந்திட செங்கமலம் அழகுற செல்லாச்சியும் வந்தாச்சு செல்லக் கதை கேட்டாச்சு! பசுக்கள் மேச்சல் தரையில் நின்று தொழுவம் சேர்ந்திட அந்திவந்த பசுவை கண்ட...

    Continue reading