சர்வேஸ்வரி கதிரித்தம்பி.

“என்று தீரும் ”

என்று தீரும்…யாரிடம் கேட்பது…யாரிடம் சொல்வது…? இறையாட்சி எட்டுத்திக்கிலும் அங்கே
முறையிட முன்னுரிமை
கொடுப்பாரோ…?
கறைபட்ட தாய்மண்ணிலே
குறைவற்ற வளங்களும்…
நிறைவான தலைமுறையும்…
துறைமுக காலவரலாறும்…
ஆக்கிவைத்த யுகம்
தேக்கிவைத்த பண்பாடும்…
போக்கிவைக்க எடுத்தாளும் மனமே…
என்றுவரை இந்ஜெகம்…?அறிவாயா…?
அன்றுவரை காத்திருக்க
நீயும் நானும் உறுதி சொல்லத்தான்
முடியுமா….?
ஈகமும் தாகமும் போராட்ட பந்தம்…
அகமும் புறமும் நீதி
ஊற்றாக பாய்ந்தாலே
ஜெயம் கொண்ட ஜெகம்
ஆகுமே …
அதுநாள் வரை காத்திருக்க முடியுமா….?

– சர்வேஸ்வரி கதிரித்தம்பி.

Nada Mohan
Author: Nada Mohan