அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

திருமதி.அபிராமி கவிதாசன்.

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் -217.
“தவிப்பு”

தவியாய் தவித்து தவமிருந்தேன்
தாயுடன் தந்தையுடன்
துணையாக தங்கிட
தவறியதால் //

புவியினில் புன்னகை பூவாக பூத்திட்ட
புனித பொக்கிச பிறப்பிடப் பந்தமே //

செவிகுளிர செந்தமிழில் சொந்தமுடன் பேசிமட்டுமே
செவ்விதழ் சொன்னதுவே சமாதான சம்மதம்//

பவித்திர பந்தமுடன்
பாசமுடன் பாங்குடன்
பழகிட பகிர்ந்திட பக்கத்தில் பாதகமே //

வருத்தம் வந்து
வதைத்து வாட்டுமே
வழியில்லை வெளியிடவும் வருந்தி வாடுதே//

திருமதி.அபிராமி கவிதாசன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading