மனோகரி ஜெகதீஸ்வரன்

பள்ளிப் பருவம்

உதயம் கண்ட பருவம்
உள்ளத்தாலேயே உறவாடிய பருவம்

ஆசிரியத்துள் அடைக்கலமான பருவம்
அகரமுதலாய் அறிவன திரட்டிய பருவம்
அடைவினைப் பொருத்திய பருவம்
அந்தரங்கசுத்தி மிளிர்ந்த பருவம்

நினைத்தாலே இனிக்கும் பருவம்
நிம்மதியைச் சுவைத்த பருவம்
குணத்தாலே நிறைந்த பருவம்
குறும்புடன் சுழன்ற பருவம்
குதூகலத்தையே சுமந்த பருவம்

சீருடை அணிந்த பருவம்
சித்திகள் எய்திய பருவம்
தோழமையால் குளித்த பருவம்
தொண்டுகளால் களித்த பருவம்
புத்தகச்சுமையால் பூத்த பருவம்
பூத்தூக்கம் புகுந்த பருவம்

சாதிமதம் அணுகாப் பருவம்
சங்கடங்கள் அழுத்தாப் பருவம்
மீண்டும் வராப் பருவம்
நினைவுச்சேமிப்பில் நிலைத்த பருவம்
அதுவே யெந்தன் பள்ளிப்பருவம்.

மனோகரி. ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading