அது ஒரு கனாக்காலம்..

வசந்தா ஜெகதீசன்
அதுவொரு கனாக்காலம்..
தாயக முற்றமும் தன்னிலை வாழ்வும்
பற்றுடன் உறவுகள் பாசத்தின் பகிர்வும்
ஊருடன் உலாவந்த திருவிழாக்காலமும்
பள்ளியின் வாழ்வும் பழகிய நட்பும்
சில்லென வீசிடும் தென்றலின் வருடல்
திசையெங்கும் திரும்பினும் சுற்றமும் சூழலும்
வாழ்ந்திட்ட வனப்பும் வசந்தத்தின் வாழ்வும்
கனவென எண்ணுது காலமும் விரையுது
போரும் வதையும் புதைந்த வாழ்வும்
போக்கிடமற்று அலைந்த பாதையும்
குண்டுகள் ஷெல்கள் குற்றுயிர்க் கொலைகள்
ஆண்டுகள் தோறும் அவலத்தின் அனர்த்தம்
காணாமல் போனோர் காலத்தின் வலியும்
நீண்டு தொடரும் ஈழத்தின் வலியே!
கனாக்காலமேகணதியில்உளமே.நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading