ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

அந்திப்பொழுது…

வசந்தா ஜெகதீசன்
அந்திப் பொழுது…
வான் சிவந்து மெய்யெழுதும்
வையமே அழகொளிரும்
களிப்பிலே மனமொளிரும்
காந்தமென புவி சிரிக்கும்
மலரினங்கள் மையல் கொள்ளும்
புள்ளினங்கள் கூடு வரும்
உழவர்கள் உளக்களிப்பில் நடை தளர மனை வருவார்
அந்தி வானம் அழகொளிரும்
மதி வானில் சித்திரமாய்
ஒளிருகின்ற உடுக்களின் பேரழகே பேராற்றல்
ஆதவனின் அடிவானம் ஒய்வெழுதும் தூரிகையால் துலங்க வைக்கும் மெய்யழகு
பேரழகே புவித் தாயின் புன்னகையில் செக்கச் சிவக்கும் அந்திப் பொழுதே ஆதாரம்!
நன்றி மிக்க நன்றி.

Author:

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading