அந்தி நேரம்

ஜெயம்

அந்தி நேரம்

அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான ஓவியம் தீட்டுதே
சிவப்பு தங்கமென கலந்ததோர் தெளிப்பு
மறையுமுன் ஆதவனின் செம்பொன் குளிப்பு

நாளை மீண்டும் பிறப்பேனென உரைத்து
சூரியன் வர்ணத்தை வானிலே கரைத்து
இயற்கையின் அழகை கூட்டிடும் பொழுது
அந்தி நேரம் விடைபெறும் பொழுது

தொலைவில் ஆழ்கடலின் தண்ணீரும் மின்னும்
தொலைந்தே போய்விடும் அதற்குள்ளே எண்ணம்
ஒளி முத்துக்கள் அலையிலே மிதக்கும்
களிப்போடு பார்த்ததை விழிகளும் அள்ளும்

நெஞ்சத்தை நிறைக்கும் அமைதியின் பெருக்கு
கொஞ்சிடும் பொழுதாய் நிகழும் அந்திப்பொழுது
தொலைவில் மேகங்களின் சிவந்த முகம்
முளைக்குமதை பார்த்திடின் அகமெல்லாம் சுகம்

16-19-2025

Author: