” ஆணினமே வாழி “

ரஜனி அன்ரன் (B.A) ” ஆணினமே வாழி ” 20.11.2025

தந்தையாய் தலைவனாய் தனயனாய்
தன்னலமின்றியே தலைமுறை காத்து
மலைபோல் பாரத்தைத் தலைமேல்சுமந்து
குடும்பத்தின் கோபுரமாய் குன்றின்விளக்காய்
உழைத்திடும் ஆணினமே அனைத்துலகும் போற்றிடுதே
கார்த்திகைத் திங்கள் பத்தொன்பதாம் நாளை
அனைத்துலக ஆண்கள்தினமாக !

நிழலாய்நின்று துணையாகி
நிஜமாய் வாழ்வில் இணையாகி
புயலாய் வெளியில் தெரிந்தாலும்
மழைத்துளியாய் நனையும் உம்இதயம்
ஆயிரம்கவலைகள் இருந்தாலும்
அர்ப்பணிப்பில் இசையாகுமே உம்இதயம் !

நம்பிக்கை முனைப்பில் வாழ்வினை நகர்த்தி
குடும்பத்தின் தூணாகி குதூகலத்தின் அரணாகி
சுமைகளைச் சுகமாகசுமந்திடும் ஆணினமே
உங்களை நீங்களே பாராட்டும்நாள்
உணர்வோடு நின்று பார்க்கும்நாள்
ஆணினமே வாழ்த்துக்கள் உமக்கு !

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading