ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர்
தமிழ்மணம் கமழும் தேசத்தை
நேசித்த நெஞ்சங்களில்
சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில்
துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க
மறந்தனர் தங்கள் உறவுகளை
களைந்தனர் தங்கள் உணர்வுகளை அஞ்சாமல்
மதித்தனர் துச்சமென தங்கள் உயிர்களை
துறந்தனர் தங்களையே தமிழினத்து விடுதலைக்காக
காலத்தால் அழியாத காவியங்கள் அவர்கள்
காலம் எல்லாம் பூஷிக்கப்பட வேண்டியவர்கள்
சந்தனப் பேழைக்குள் சமாதியானவர்கள்
காலை வேளையில் உணர்வுகள் கானங்களால்
ஆத்மராகம் ஆகட்டும் அவர்கள் ஆத்மாக்களுக்கு!

Author:

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading