ஆறுதல் யார் தருவார்

ராணி சம்பந்தர்

சொட்டுச் சொட்டானதோ
கொட்டிப் பெருத்த டிட்வா
புயலுடன் கட்டிப் புரண்டே
அயலும் ஒட்டிக்கொண்டது

கரையோடித் திரண்ட அது
நுரை கக்கி மரம், விலங்கு,
வீடென நிரை நிரையாகக்
படகோட்ட கூட்டிச் சென்றது

பெருங்குளம் முட்டி முடைய
வயல் ,வரம்பு ,வாய்க்கால்
தேடி ஓடிப் வீதிப் பாலமும்
மண்ணரித்தே உடைத்தது

துள்ளிக் குதித்த மீன்களை
பள்ளிச் சிறுவர், பெரியவர்
அள்ளிக் குவிக்க அலையும்
காத்திருந்து உடலும் காவிட

துளைத்தெடுத்த மண் சரிவு
உயிரோடு புதைந்த மலையக
வாழ் மானிடரது அழுகுரலும்,
கொதிக்கும் கதறலும் ,பெரு-
மூச்சுக் குதறலும் மூசிடவே
யார்தான் ஆறுதல் தருவாரோ?

Author:

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading