இயற்கை வரமே இதுவும் கொடையே-2081 ஜெயா நடேசன

இயற்கை வரமே இதுவும் கொடையே-2081 ஜெயா நடேசன் செங்கதிரோன் ஒளியாகி கடலில் தாழ்ந்து காரிருளாக்கி மறைவான் வானத்து பறவைகள்...

Continue reading

இயற்கை வரமே இதுவும் கொடையே

செல்வி நித்தியானந்தன்
இயற்கை வரமே
இதுவும் கொடையே )733)

இயற்கை கொடையில் பலவுண்டு
இறையாய் தந்தவரமே என்று
இராபகலாய் வருவதும் நன்று
இருசுடராய் இருப்தும் சிறப்பு

சுத்தக் காற்று சுகமான சுவாசம்
சத்து நிறைந்த ஒளியின் பிரபாகம்
இலவச மழையும் இணைந்த சேர்வும்
இயற்கை தந்த கொடையில் நிறைவும்

காடுகள் மலைகள் ஆறுகுளங்கள்
எத்தனை எத்தனை விசித்திரம்
நாடுகள் பலவும் அறிவின்வேகம்
போட்டி போட்டு அழிக்கும் மோகம்

கோடைசென்று மாரியும் வந்திட
மானிட வாழ்வுக்கு நீரும் ஒன்று
மகத்தான பனியும் குளிருடன் சேர
மண்ணும் வெண்பனியாகும் கோலமாகுமே

Author:

வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

Continue reading