இயற்கை வரமே இதுவும் கொடையே…

வசந்தா ஜெகதீசன்
பஞ்ச பூதங்கள் படைப்பில் உலகம்
பரிணம வளர்ச்சியில் பாரே இமயம்
இயற்கை வளமே இதனின் உரிமம்
இல்லாது போயின் வாழ்வே கடினம்

வற்றாச் சுரங்கமாய் வனப்புகள் நிறையும்
வாழ்வியல் ஆழியே இதற்குள் இணையும்
உலகியல் ஜாலங்கள் கோலமாய் மிளிரும்
இயற்கை வனப்பே இங்கித நிறைக்கும்

கொடையெனப் பலதை வாரியே தந்து
குவலய வாழ்வு குன்றிலே விளக்காய்
வாரியே நிறைக்கும் வண்ணச் சுவடு
வரமெனக் கிடைத்த இயற்கை இனிது
வாய்ப்புகள் நிறைக்கும் புவியே அழகு
தனித்துவம் எமக்கு தருகின்ற இயல்பு
தரணி வாழ்வின் வற்றாத ஊற்று.
நன்றி மிக்க நன்றி

Author:

வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

Continue reading