“இயற்கை வரமே இதுவும் கொடையே”

நேவிஸ் பிலிப் கவி இல(509

படைப்புக்கள் அனைத்தும்
இறைவனின் கொடையாகும்
இன்பம் தரும் இயற்கையோ
மனித வாழ்வின் வரமாகும்

விரிந்த வானும் பரந்த பூமியும்
ஆழ் கடலுடன் அடர்ந்த காடும்
ஓடும் நதியும் வெண் மணற் பரப்பும்
பகலும் இரவும் மழையும் வெயிலும்

சுகமாய் வருடும் தென்றல் காற்றுடன்
குயில்கள் இசைக்கும் ஓசை
காதில் வந்து மெல்லென மோத
வண்ண மயில்கள் நடனமாட

இயற்கையென்னும் சோலையிலே
பறந்து திரியும் பறவைகளும்
துள்ளித் திரியும் விலங்கினமும்
வர்ணிக்க வார்த்தையில்லை
வர்ணக் கோல பூவுலகில்

பசுமையின் நடுவே
பரவசப் பயணம்
பார்ப்பவை எல்லாம்
மனதை மயக்கும்
நன்றி

Author:

வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

Continue reading